''விக்ரமைப்போல் யாருமே இல்லை!'' - ரஜினி புகழாரம்

''விக்ரமைப்போல் யாருமே இல்லை!'' - ரஜினி புகழாரம்

செய்திகள் 16-Sep-2014 9:48 AM IST VRC கருத்துக்கள்

நேற்று நடைபெற்ற ‘ஐ’ ஆடியோ விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இசைக் குறுந்தகடை வெளியிட்டுப் பேசியபோது...

‘‘ஷங்கர் ஒரு வித்தியாசமான இயக்குனர். உலகத்தரம் கொண்ட படங்களை தமிழ் மண்ணைச் சேர்ந்தவர்களாலும் இயக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். இப்படத்தில் கடுமையான உழைப்பைக் கொடுத்து ஹாலிவுட் திரை உலகை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம் ‘ஐ’ விக்ரம் ஆக மாறியுள்ளார். தமிழ் சினிமாவிலும், ஹாலிவுட்டிலும் விக்ரம் போல் ஒரு நடிகர் இல்லை. இப்படத்தில் தன் உடலை வருத்தி, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விக்ரமுக்கு என்னுடைய இதயம் கனிந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

ரஜினி இதைக்கூறி முடிக்கவும் அதை ஆமோதிப்பதுபோல் நேரு ஸ்டேடியமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;