ஒரே நாளில் விக்ரம், ஷாருக்கான், ராம் சரண்!

ஒரே நாளில் விக்ரம், ஷாருக்கான், ராம் சரண்!

செய்திகள் 15-Sep-2014 5:46 PM IST Chandru கருத்துக்கள்

‘ஐ’ ஆடியோ விழாவின் பரபரப்பில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். நேற்றே சென்னையில் தரையிறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் இன்று மதியம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து திரும்பியிருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் விழா மேடைக்கு அர்னால்ட் செல்லவிருக்கிறார். ஏற்கெனவே எமி ஜாக்சன் விழா அரங்கத்திற்கு வந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது எவ்வளவு பெரிய விழாவோ, அதேபோல் வட இந்தியர்களுக்கும் முக்கிய இசை வெளியீட்டு விழா ஒன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிகப் பிரம்மாண்டமாக மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு விழாக்கள் மட்டுமல்லாமல் ராம் சரண், காஜல் அகர்வால், கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் ‘கோவிந்துடு அந்தரிவாடலே’ படத்தின் இசை வெளியீடும் இன்றுதான் நடக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;