‘ஐ’ ஆடியோ விழாவில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

‘ஐ’ ஆடியோ விழாவில் என்னென்ன சிறப்பம்சங்கள்?

செய்திகள் 15-Sep-2014 4:20 PM IST Chandru கருத்துக்கள்

சென்னை சென்ட்ரல் ஏரியாவே தற்போது ‘ஐ’ பீவரால் தகதகத்துக் கொண்டிருக்கிறது. அர்னால்ட், ரஜினி, ஷங்கர், விக்ரம், எமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான உட்பட தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் பலரையும் காண்பதற்காக மொத்த சென்னையும் நேரு ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது. டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இசை வெளியீட்டை காண்பதற்கான அனுமதி அளிக்கப்படுகிறதாம்.

* ‘டெர்மினேட்டர்’ படத்தில் பயன்படுத்தியதுபோல் ஹார்லி டேவிஸன் பைக்கிலேயே நேரு ஸ்டேடியத்திற்கு அர்னால்ட் வரவிருக்கிறாராம்.

* 40 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு சுவிட்சர்லாந்திலிருந்து ‘பபுள் டான்ஸர்ஸ்’ எனப்படும் நடனக் கலைஞர்கள் 8 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்களாம்.

* விக்ரம் ஏதாவது ஒரு பாடலுக்கு வந்து நடனமாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விக்ரம் பல கெட்அப்களில் நடித்திருக்கும் ‘ஐ’ படத்தின் மிரட்டலான டீஸர் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

* ரஹ்மான் டீமின் லைவ் ஆர்கெஸ்ட்ரா மூலம் ‘ஐ’ படத்தின் பாடல்கள் மேடையில் இசைக்கப்படுமாம்.

* ‘ஐ’ படத்தின் ‘லேடியோ...’ பாடலுக்கு படத்தின் நாயகி எமி ஜாக்சன் மேடையில் ஆடவிருக்கிறாராம்.

* இந்த மிகப்பிரம்மாண்டமான விழாவிற்காக 10 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;