‘ஐ’ விழாவை ‘மிஸ்’ செய்யும் பிரபல நடிகர்!

‘ஐ’ விழாவை ‘மிஸ்’ செய்யும் பிரபல நடிகர்!

செய்திகள் 15-Sep-2014 3:26 PM IST Chandru கருத்துக்கள்

இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட்டிலிருந்து அர்னால்ட் நேற்று சென்னைக்கு வந்திருக்கிறார். அதேபோல் ஷிமோகாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ‘லிங்கா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘ஐ’ விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னைக்குத் திரும்பியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. இன்னும் பல பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னால் கலந்துகொள்ள முடியாத நிலையை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதி. ‘ஆரம்பம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள இவர் இதுகுறித்து, ‘‘தவிர்க்க முடியாத படப்பிடிப்பு காரணமாக ஒரு மிகப்பெரிய விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது. இதனால் அர்னால்ட், சூப்பர்ஸ்டார் ரஜினி போன்ற சாதனையாளர்களை மேடையில் சந்திக்கும் வாய்ப்பையும் இழக்கிறேன். இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று தனது ஃபேஸ்புக் பக்ககத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ராணா.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;