‘விஐபி’யில் ஜானகி... ‘கத்தி’யில் ஜேசுதாஸ்!

‘விஐபி’யில் ஜானகி... ‘கத்தி’யில் ஜேசுதாஸ்!

செய்திகள் 15-Sep-2014 12:27 PM IST Chandru கருத்துக்கள்

தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் எஸ்.ஜானகியின் குரலில் ‘அம்மா...’ பாடலை பதிவு செய்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத். ஜானகியுடன் தனுஷும் இணைந்து பாடிய இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தற்போது விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தில் தெய்வீக குரலுக்குச் சொந்தக்காரரான ஜேசுதாஸைப் பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். ‘‘ஜேசுதாஸை சாரைப் போன்ற ஒரு சாதனையாளரை என் படத்தில் பாட வைத்ததை ஆசீர்வதிக்கப்பட்டதைப் போல் உணருகிறேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. இது ஒரு தெய்வீக அனுபவம்’’ என்று தனது ட்வீட்டில் இதுகுறித்து குறிப்பிட்டிருக்கிறார் அனிருத். சமீபத்தில் விஜய் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடலைத் தொடர்ந்து இப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது எல்லா பாடல்களும் பதிவுசெய்யப்பட்ட ‘கத்தி’யின் முழுமையான ஆல்பம் ஈராஸ் மியூசிக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாம். வரும் 18ஆம் தேதி பாடல்கள் வெளியாகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;