12 மணி நேரத்தில் ஒரு படம்!

12 மணி நேரத்தில் ஒரு படம்!

செய்திகள் 15-Sep-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

பல யூனிட்டுகள், பல இடங்களில் இயங்கி, படப்பிடிப்பை நடத்தி 24 மணி நேரத்திற்குள் எடுத்து சாதனை படைத்த படம் ‘சுயவரம்’. இதனைப் போன்று 12 நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி ஒரு படம் தயாராக இருக்கிறது. அந்தப் படத்திற்கு ‘நடு இரவு’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ‘ஜெயலட்சுமி மூவீஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களே!

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் புதுவை மாரிசா. இந்தப் படம் குறித்து இயக்குனர் மாரிசா கூறும்போது, ‘‘இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற 19-ஆம் தேதி நடத்தவிருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பைத் துவங்கி, மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது, 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க உள்ளோம். இது பேய் சம்பந்தப்பட்ட கதை. இதற்கு தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. அதனால் புதுமுகங்களை நடிக்க வைக்கிறோம். எந்த பேயாக இருந்தாலும் திகில் இருதால் போதும் என்பது என் கருத்து. இதில் முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார். இப்படம் வித்தியாசமான படமாக இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;