டிவியில் நேரடி ஒளிபரப்பாகும் ‘ஐ’

டிவியில் நேரடி ஒளிபரப்பாகும்  ‘ஐ’

செய்திகள் 13-Sep-2014 4:46 PM IST VRC கருத்துக்கள்

கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் மேட்டர் ஷங்கரின் ‘ஐ’ படமும், அதன் ஆடியோ வெளியீட்டு விழா சம்பந்தப்பட்ட விஷயங்களும் தான்! இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நாளை மறுநாள் (15-9-14) நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது ஏற்கெனவே உறுதியாகி விட்ட நிலையில், இப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட இன்னும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கும் இந்த விழாவை ஜெயா டி.வி.நேரடியாக ஒளிபரப்பு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயா டிவி, ‘ஐ’ படத்தின் சாட்லைட் ரைட்ஸை பெரும் தொகைக்கு வாங்கி இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்போது இந்த இந்த விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;