சிம்புவின் திடீர் அறிவிப்பு!

சிம்புவின் திடீர் அறிவிப்பு!

செய்திகள் 13-Sep-2014 2:34 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடித்த படங்கள் வெளியாகி, வெகு நாட்களாகி விட்ட நிலையில் அவர் நடித்திருக்கும் ‘வாலு’ படத்தை நவம்பர் மாதமும், ‘இது நம்ம ஆளு’ படத்தை டிசம்பர் மாதமும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக சிம்புவே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த படங்கள் ‘வாலு’ மற்றும் ‘வேட்டை மன்னன்’. இந்த இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் இப்படங்கள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த படங்கள் குறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாகும். அதற்கு முன்னதாக நவம்பர் மாதம் ‘வாலு’ திரைப்படம் ரிலீசாகும்! நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் வரிசையாக வெளிவரும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இப்படங்கள் தவிர கெளதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;