ஹீரோயினை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!

ஹீரோயினை பார்த்து மிரண்டு ஓடிய குரங்குகள்!

செய்திகள் 13-Sep-2014 1:49 PM IST VRC கருத்துக்கள்

பேய் பட வரிசையில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘மூச்’. பாரதிராஜாவின் சிஷ்யர் வினுபாரதி இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இப்படப் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வருமாறு! பேய் சம்பந்தப்பட்ட படம் இது என்பதால் குன்னூர் அருகேயுள்ள ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, பாழடைந்த ஒரு பங்களா இருக்கும் பண்ணை தோட்டத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் புதுமுகம் சுஹாசினி கருப்பு நிற உடை அணிந்து, கருப்பு நிற மேக்-அப் போட்டு, அந்த மேக்- அப், வெயிலில் காய்வதற்காக தனியாக உட்கார்ந்திருந்தாராம். அப்போது, அந்த தோட்டத்தில் எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 30 குரங்குகள், சுஹாசினி பேய் வேடம் போட்டு உட்கார்ந்திருந்த்தை பார்த்து மிரண்டு போய், அலறி அடித்து ஓடி விட்டதாம்! அந்த படப்பிடிப்பு முடியும் வரை அந்த குரங்குகள் அந்த தோட்டத்தை எட்டிப் பார்க்கவேயில்லையாம்! லண்டன் வாழ் தமிழர் பூபாலன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகம் நிதின் ஜார்ஜ் கதையின் நாயகனாக நடித்திருக்க, மிஷா கோஷல், சுஹாசினி ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். நித்தியன் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னையில் ஒரு நாள் 2 - டீசர்


;