‘அரண்மனை’க்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்?

‘அரண்மனை’க்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்?

செய்திகள் 13-Sep-2014 11:08 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லக்ஷ்மிராய், சந்தானம் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘அரண்மனை’. முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை இயக்கியிருக்கும் சுந்தர்.சியும் இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். வரும் 19ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை சென்சார் அதிகாரிகள் பார்வையிட்டு, படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பயமுறுத்தும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் குழந்தைகளுடன் பெரியவர்களும் அமர்ந்து பார்க்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதால் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றார் ‘அரண்மனை’ படக்குழுவைச் சேர்ந்த ஒருவர்.

ஹாரர் படமாக இருந்தாலும் சுந்தர்.சியின் வழக்கமான காமெடிகளும் இப்படத்தில் இருக்குமாம். தெய்வசக்தி நிறைந்த பெண்ணாக ஹன்சிகா இப்படத்தில் நடித்திருக்கிறாராம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் அவருக்கு இருக்குமாம். இவருடைய கேரக்டர் அறிமுகமாகும் போது படத்தில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;