‘பர்மா’ படத்தில் விஜய், அஜித், சூர்யா, ஷங்கரின் கார்!

‘பர்மா’ படத்தில் விஜய், அஜித், சூர்யா, ஷங்கரின் கார்!

செய்திகள் 12-Sep-2014 11:25 AM IST Chandru கருத்துக்கள்

படத்தில் பெரிய நடிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, படத்தை விளம்பரப்படுத்துவதற்காக முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்படியாவது அந்தப் படங்களில் உள்ளே நுழைத்துவிடுவது கோலிவுட்டின் வாடிக்கை! குறிப்பாக தியேட்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் என்றால், ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்களின் படங்கள் திரையில் ஓடுவதுபோல் காட்சிகள் வைப்பார்கள். சிம்பு தன் படத்தில் பெரும்பாலும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைப்பது வாடிக்கை. இப்படி தங்களுக்குப் பிடித்த முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வளர்ந்து வரும் நடிகர்கள் தங்கள் படத்தில் வைப்பது சகஜம். சமீபத்தில் வெளிவந்த ‘வல்லினம்’ படத்தின் ‘என்ட் கார்டு’ போடும்போது ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சி வந்தபோது, அதில் அஜித்தின் கார் ரேஸ் காட்சிகளை வைத்திருந்தது ‘தல’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதேபோல் கார் திருட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இன்று வெளியாகியிருக்கும் ‘பர்மா’ படத்தின் இறுதிக்காட்சியில் சினிமா பிரபலங்கள் நிஜத்தில் பயன்படுத்தும் கார்களைக் காட்டியிருக்கிறார்களாம். இதில் அமிதாப், ஷாருக், ஷங்கர், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட பல பிரபலங்கள் பயன்படுத்தும் கார்கள் இடம் பெற்றிருக்கிறதாம். கடைசியாக ‘தல’ அஜித்தின் ஸ்விப்ட் கார் காட்டப்படுகிறதாம். படம் முடிந்த பிறகும் இந்தக் காட்சியை கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டரில் நின்று ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த காட்சி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - டைட்டில் பாடல் வீடியோ


;