‘‘நான் வருவேன்டா...’’ - சவால் விட்ட விஷால்

‘‘நான் வருவேன்டா...’’ - சவால் விட்ட விஷால்

செய்திகள் 12-Sep-2014 9:11 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளி ரேஸில் கலந்துகொள்வதற்கு 3 பெரிய படங்கள் கடந்த சில வாரங்களாகவே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் முன்னோட்டமாக முதல் ஆளாக ‘ஐ’ படம் வரும் 15ஆம் தேதி ஆடியோ விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. அதனைத் தொடர்ந்து ‘கத்தி’ படம் 18ஆம் தேதி பாடல்களை வெளியிட உள்ளது. இந்நிலையில் சத்தமில்லாமல் இருந்த ‘பூஜை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்று இரவு, அதாவது ‘ஐ’ படத்தின் மோஷன் போஸ்ட் வெளியான பிறகு திடீரென வெளியிடப்பட்டது.

வழக்கம்போல் ஹரி படம் எப்படியிருக்குமோ, அதைப்போலவே அச்சு அசலாக இந்த ‘பூஜை’யும் இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படி இந்த டீஸரில் புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. ஹரி படத்தைப் பொறுத்தவரை பரபரப்பான திரைக்கதையே அவரின் படங்கள் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும். எனவே ‘பூஜை’ இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த ஒரு டீஸரை வைத்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால், ‘தீபாவளி வெளியீடு’ என்பதை இந்த டீஸரில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் விஷாலும் ஹரியும். இந்த டீஸரின் முடிவில் விஷால் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு, கோபத்துடன் ‘‘நான் வருவேன்டா....’’ என சபதமிட, அதனைத் தொடர்ந்து தீபாவளி வெளியீடு என்ற வாசகத்தையும் வைத்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, எந்தப் படம் வந்தாலும் ‘பூஜை’ கண்டிப்பாக வரும் என்பதையே குறிப்பால் உணர்த்தியிருப்பதாகவே தோன்றுகிறது.

விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரித்திருக்கும் ‘பூஜை’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு ப்ரியன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி² - மோஷன் போஸ்டர்


;