‘ஐ’ எந்தளவு முடிந்திடிருக்கிறது? - ஷங்கர் விளக்கம்

‘ஐ’ எந்தளவு முடிந்திடிருக்கிறது? - ஷங்கர் விளக்கம்

செய்திகள் 12-Sep-2014 8:51 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று இரவு ‘ஐ’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த ஒரு மோஷன் போஸ்டரைப் பார்த்தே மிரண்டு போய் இருக்கிறார்கள். அதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம், ‘ஐ என்றால் நச்சு பானம்... அதனால் விக்ரம் ஓநாய் மனிதராக மாறுகிறார்...’ என நாம் முதன்முதலில் வெளியிட்ட ஒரு தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. விக்ரமின் அழகான அந்த முகம், கோரமாவதுபோல இந்த போஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, ‘ஐ’ படத்தின் @பேட்ஜ் ஒர்க் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனவும், அதை ஆடியோ விழாவிற்கு பின்பு எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஷங்கர் கூறியிருக்கிறார். அதோடு ‘ஐ’ ஆடியோ விழாவில் ‘டெர்மினேட்டர்’ அர்னால்டுடன், நம்ம ‘சிட்டி ரோபோ’ சூப்பர்ஸ்டார் ரஜினியும் கலந்துகொள்வதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.

ஆக.... ‘ஐ’ விழாவை உலகமே கவனிக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;