சென்சாரில் கார்த்தியின் ‘மெட்ராஸ்’

சென்சாரில் கார்த்தியின் ‘மெட்ராஸ்’

செய்திகள் 11-Sep-2014 5:36 PM IST Chandru கருத்துக்கள்

‘பிரியாணி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி ‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. ‘அட்டகத்தி’ பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பாடல்களும், டிரைலரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘மெட்ராஸ்’ படத்தின் சென்சார் காட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘யு’ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இன்னும் சிறிது நேரத்தில் இப்படத்திற்கு என்ன சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்பது தெரிந்துவிடும். விரைவில் அதனை உங்களுடன் பகிர்கிறோம்.

இப்படத்தை உலகமெங்கும் ‘ட்ரீம் ஃபேக்டரி’ வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;