‘ஜீவா’ பட பாடலில் புதிய சாதனை!

‘ஜீவா’ பட பாடலில் புதிய சாதனை!

செய்திகள் 11-Sep-2014 2:59 PM IST Chandru கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்திருக்கும் ‘ஜீவா’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. டி.இமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே படத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கவிஞர்கள் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த குடும்பம்... கவிப்பேரரசு வைரமுத்துவின் குடும்பம்!

‘ஜீவா’ ஆல்பத்தில் கார்த்திக், பவ்யா பாடியிருக்கும் ‘ஒவ்வென்றாய் திடுகிறாய்...’ என்ற பாடலை கவிப்பேரரசு வைரமுத்துவும், ‘ஒரு ரோசா...’, ‘ஒருத்தி மேல...’ ‘எங்கே போனாய்...’ ‘நேற்று நான்...’ ஆகிய 4 பாடல்களை வைரமுத்துவின் மூத்த மகனான கவிஞர் மதன் கார்க்கியும், ‘சங்கி... மங்கி...’ என்ற வித்தியாசமான பாடலை வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்துவும் எழுதியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘ஜீவா’ படத்தின் பாடல்கள் ஒரு குடும்பத் தாலாட்டு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரு உச்சத்துல இருக்காரு - டிரைலர்


;