விஜய்தான் சிறந்த டான்ஸராம்... சொல்கிறார் பிரபுதேவா!

விஜய்தான் சிறந்த டான்ஸராம்... சொல்கிறார் பிரபுதேவா!

செய்திகள் 11-Sep-2014 1:51 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுதேவாவும், விஜய்யும் இணைந்து மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தை கொடுக்கவிருக்கிறார்கள் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இன்று பிரபுதேவா பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார். அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகிவரும் ஹிந்திப் படமான ‘ஆக்ஷன் ஜாக்ஸன்’ படத்தின் புரமோஷனுக்காகவே அவர் தமிழ்ப் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். இப்படம் மகேஷ்பாபு, சமந்தா நடிப்பில் சூப்பர்ஹிட்டான ‘தூக்குடு’ படத்தின் ரீமேக்காம். இப்படம் குறித்த விஷயங்களை பேசி முடித்த பின்னர், மீண்டும் தமிழுக்கு வருவது குறித்த திட்டம் பற்றி பத்திரிகையாளர்கள் பிரபுதேவாவிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘தமிழுக்கு மீண்டும் வரவேண்டும் என நீண்டநாட்களாகவே நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஒரு நல்ல கதை அமைந்த பிறகு கண்டிப்பாக தமிழுக்கு வருவேன்!’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து ‘‘தென்னிந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’’ என கேள்வி கேட்டபோது, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக ‘‘விஜய்... அவர்தான் தென்னிந்தியாவின் சிறந்த டான்ஸரும் கூட’’ என்று பதிலளித்தாராம் பிரபுதேவா.

மீண்டும் ‘போக்கிரி’ பொங்கல் வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே அவரின் பதில்கள் உணர்த்துகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;