‘காதல் கோட்டை’, ‘ஆரம்பம்’ வழியில் ‘தல 55’

‘காதல் கோட்டை’, ‘ஆரம்பம்’ வழியில் ‘தல 55’

செய்திகள் 11-Sep-2014 1:41 PM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் கேரியரில் மறக்க முடியாத படம் ‘காதல் கோட்டை’. அகத்தியன் இயக்கிய இப்படத்தில் அஜித்தும், தேவயானியும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே தங்களுக்குள் ‘காதல் கோட்டை’யை கட்டி, தமிழ் சினிமாவிற்கு புதிய டிரென்ட்டை அறிமுகம் செய்து வைத்தார்கள். இப்படத்தில் நிறைய காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கியிருந்தார்கள். அதேபோல கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான ‘ஆரம்பம்’ படத்திலும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதே பாணியில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் சில ராஜஸ்தான் காட்சிகள் இடம் பெறுகிறதாம். அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் (செப்டம்பர் 11) ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறதாம். ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் என மொத்தம் 10 நாட்கள் ராஜஸ்தானிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏற்கெனவே ராஜஸ்தானில் படம்பிடிக்கப்பட்ட ‘காதல் கோட்டை’யும் ‘ஆரம்பமு’ம் பெரிய வெற்றி பெற்றிருப்பதால் இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை படக்குழுவினர் மத்தியில் உருவாகியிருக்கிறதாம்.

‘தல 55’ படத்தின் பாடல்கள் நவம்பரிலும், படம் டிசம்பரிலும் வெளியாகவிருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;