கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் ‘இறைவி’?

கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் ‘இறைவி’?

செய்திகள் 11-Sep-2014 1:05 PM IST Chandru கருத்துக்கள்

குறும்பட இயக்குனராக இருந்து ‘பீட்சா’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். ‘பீட்சா’ தந்த சூப்பர் எனர்ஜியில் சித்தார்த், சிம்ஹா, லக்ஷ்மிமேனனை வைத்து ‘ஜிகர்தண்டா’ படத்தை தனது இரண்டாவது படைப்பாகக் கொடுத்தார். இப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்போடு தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக பல நட்சத்திரங்களை ஒன்றாக இணைத்து ‘இறைவி’ என்ற படத்தை இயக்கப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறதாம். ஆனால், கண்டிப்பாக சிம்ஹாவும், கருணாகரனும் ‘இறைவி’யில் இருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒருசில வாரங்களில் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;