முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்!

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்!

செய்திகள் 11-Sep-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

‘பொண்ணு ஃபிலிம்ஸ்’ படநிறுவனம் சார்பாக குஞ்சப்பன், ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அந்த குயில் நீதானா’. இப்பட்த்தில் புதுமுகங்கள்
சாகர் கதாநாயகனாக நடிக்க், கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் வேணு, சலாம் குந்தத்து, ராஜ்மார்த்தாண்டம்,ராஜன், ஸ்ரேயாஜோஸ், சாருலதா, ஜெசி,ராக்பியா, ஸ்ரீகாந்த், தமில்வால்டர், மூனார்சிவா, விபின்குமார் சுரேந்திரன் முதலான புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கும் ஸ்டான்லி ஜோஸ் படம் குறித்து பேசும்போது,

‘‘இது கிராமத்து கதை ! கிராமத்தில் உள்ளவர்கள் அதிசயக்கும் அழகி பவளம். அவளது ஆசையோ முறைமாமன் முத்துவை காதலிப்பது தான். டூரிஸ்ட் கைடாக இருக்கும் முத்து அனைவரிடமும் சகஜமாக பழகுவான். அப்படிதான் டூரிஸ்டாக வந்த அஞ்சலியிடம் பழக நேர்கிறது. சாதாரணமான அந்த பழக்கம் மற்றவர்களுக்கு வேறு மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை! முத்து – பவளம் காதல் சேர்ந்ததா என்பதை ‘அந்த குயில் நீதானா ’ படத்தின் மூலம் சொல்கிறோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உனக்கென்ன வேணும் சொல்லு - டிரைலர்


;