சூர்யா - ஜோதிகாவுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்!

சூர்யா - ஜோதிகாவுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்!

செய்திகள் 11-Sep-2014 10:07 AM IST Top 10 கருத்துக்கள்

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்த சூர்யா - ஜோதிகாவுக்குள் உருவான ‘கெமிஸ்ட்ரி’ அவர்கள் இருவரின் ‘உயிரிலே கலந்தது’. அதன் பிறகு ‘காக்க காக்க’ படத்தில் காவலுக்கும், கல்விக்கும் காதல் மலர, ஜோதிகாவின் நெஞ்சிற்குள் ‘பேரழகனா’க உருவெடுத்தார் சூர்யா. ‘மாயாவி’யாய் தினமும் ஜோதிகாவின் கனவுக்குள் வந்து போன சூர்யாவுக்குள்ளும் மலர்ந்தது ‘சில்லுனு ஒரு காதல்’.

இருவரின் அன்பையும் புரிந்துகொண்ட இருவீட்டாரின் பெற்றோர்கள் இணைந்து பேசி முடிவெடுக்க, 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி கோலாகலமாய் அரங்கேறியது சூர்யா - ஜோதிகாவின் திருமணம். இன்று... அவர்களின் எட்டாம் ஆண்டு திருமண நாள். இவர்களின் இந்த நேசமிகு காதலுக்கு சாட்சியாய் தியா என்ற அழகு தேவதையும், தேவ் என்ற அறிவுச்சூரியனும் பிள்ளைகளாய் இவர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள்.

காதலுக்கும், திருமண பந்தத்திற்கும் உதாரணமாய் விளங்கும் சூர்யா - ஜோதிகா தம்பதிகளுக்கு கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களோடு ‘டாப் 10 சினிமா’வும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;