ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஷங்கரை சிரிக்க வைத்த படம்?

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஷங்கரை சிரிக்க வைத்த படம்?

செய்திகள் 10-Sep-2014 5:18 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ‘கப்பல்’ என்ற திரைப்படத்தை வெளியிட உள்ளார். ’ஐ ஸ்டுடியோஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்க, ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் ஜி.கிருஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘கப்பல்’ படத்தில் நாயகனாக வைபவும், நாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனம் ப்ரீத்தும் நடித்து உள்ளனர். ‘கப்பல்’ படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் படம் பார்த்த பின்னர் இயக்குனர் கார்த்திக்கிடம் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார். அதன் பிறகு அந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுக் கொண்டு தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் வெளியிட ஒப்புக் கொண்டுள்ளார்.

இதைப் பற்றி இயக்குனர் ஷங்கர் கூறியதாவது ‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட உள்ளோம். என்னுடன் பல படங்களில் பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் ‘கப்பல்’ படத்தை பார்த்த பின்னர் அந்தப் படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தேன். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். படம் ஆரம்பித்தபோது சிரிக்க ஆரம்பித்த நான் இறுதிவரை சிரித்துக் கொண்டேதான் இருந்தேன். ‘கப்பல்’ எல்லா தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை. தமிழகம் மொத்தமும் இந்தப் படத்தை ரசித்துக் கொண்டாடும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;