அஜித்திடம் இருந்து போன்... சந்தோஷத்தில் விக்ரம் பிரபு!

அஜித்திடம் இருந்து போன்... சந்தோஷத்தில் விக்ரம் பிரபு!

செய்திகள் 10-Sep-2014 3:07 PM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், படத்தில் நடித்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் அவரவர் சினிமா நண்பர்களிடமும், தோழிகளிடமும் இருந்து வாழ்த்துகள் வருவது வாடிக்கைதான். சமீபத்தில் வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் இயக்குனர் ஷங்கர். சில தினங்களுக்கு முன்புகூட சிபிராஜின் ‘நாய்கள் ஜாக்கிரதை’ டிரைலரைப் பார்த்து ரசித்த ‘இளையதளபதி’ விஜய், சிபிராஜுக்கு போன் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இப்படி மனம் திறந்து பாராட்டுவதில் சூப்பர்ஸ்டார் ரஜினிதான் எல்லோருக்குமே முன்னோடி.

இந்நிலையில், நாளை மறுநாள் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிகரம் தொடு’ படம் உலகமெங்கும் வெளியாகிறது. பிரபுவும், அஜித்தும் குடும்ப நண்பர்கள் போல பழகி வருவதால், பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் அஜித். இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘‘ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் இன்டஸ்ரி நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது வாடிக்கை. ‘சிகரம் தொடு’ படத்திற்கு போன் செய்து வாழ்த்திய அஜித் சாருக்கு நன்றி!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தல ஃபேன்ஸ்... ‘சிகரம் தொடு’ படத்திற்கு டிக்கெட் போட்டாச்சா?


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;