ஹன்சிகாவுக்கு வந்த திடீர் ஆசை!

ஹன்சிகாவுக்கு வந்த திடீர் ஆசை!

செய்திகள் 10-Sep-2014 1:05 PM IST Chandru கருத்துக்கள்

நேற்று... மொத்த உலகமும் ஒரு புதிய குழந்தையின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அது... ஆப்பிள் ஐபோன் 6! உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த போனுக்கு ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ரசிகர்கள். புதுப்புது கார்களை வாங்கி, அதில் விழாக்களுக்கு வருவதை எப்படி ஒரு கௌரவமாக கருதுகிறார்களோ, அதைப்போலவேதான் தாங்கள் வைத்திருக்கும் போனையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இப்போது.... அனைவரின் பார்வையும் இந்த ‘ஐபோன் 6’ மீதுதான். இந்த போனின் மீது ஹன்சிகாவுக்கும் அலாதியான ஆசை பிறந்துள்ளதாம். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், ‘‘ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகமானதை இப்போதுதான் நேரடியாக பார்த்தேன். கிரேஸி பீஸ்... இந்த போன் எனக்கு மிக விரைவாக தேவை... ஆப்பிளின் ரசிகை!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

மேடத்துக்கு ஒரு ‘ஐபோன் 6’ பார்சேல்....!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;