முருகதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

முருகதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

செய்திகள் 10-Sep-2014 12:42 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கிறார். ஃபுட் பாய்ஸன், நெஞ்சு வலி என ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருந்தாலும், உண்மையில் அவருக்கு ஏற்பட்டது குறைந்த இரத்த அழுத்த குறைபாடாம். அதற்காகவே இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். நேற்று சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தாராம். அதேபோல் இன்னும் சில பிரபலங்களும் போனிலும், நேரிலும் முருகதாஸைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாமல், ஏ.ஆர்.முருகதாஸின் சினிமா ரசிகர்களும் ட்விட்டரிலும், போனிலும் அவருக்கு நிறைய ‘மெசேஜ்’கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனராம். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் அந்த குறுஞ்செய்திகளைப் படித்து, அதற்கு பதிலளிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறாராம். இதை அவரே, ‘‘எனக்கு வந்திருக்கும் ‘டேக் ரெஸ்ட்’ குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கும் வேலையில் நான் பிஸியாக இருக்கிறேன்’’ என ஜாலியாக ட்வீட்டியிருக்கிறார்.

ஆல் இஸ் வெல்... முருகதாஸ் இஸ் பேக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;