‘தல 55’ : கௌதம் தரும் புதுத் தகவல்கள்!

‘தல 55’ : கௌதம் தரும் புதுத் தகவல்கள்!

செய்திகள் 10-Sep-2014 10:08 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு நாளும் வரும் புதிய தகவல்களால் தினமும் எகிறிக் கொண்டிருக்கிறது ‘தல 55’ படத்தின் எதிர்பார்ப்பு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கும், படம் பொங்கலுக்கும் வெளிவரும் என சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அந்தத் திட்டங்களில் சில மாற்றங்களை தற்போது ஏற்படுத்தியிருக்கிறார்கள். அஜித் படத்தைப் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் கௌதம் மேனன். அதில் இப்படத்தைப் பற்றிய பல புதிய தவகல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில படங்களாக ‘மாஸ்’ அஜித்தை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் ‘ரொமான்டிக்’ அஜித்தைப் பார்க்கும்போது பரவசமாகும் இருக்குமாம். அதோடு ‘தல 55’ படத்திற்கான தலைப்பு ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடும் திட்டம் இல்லை எனவும் கூறியிருக்கிறார் கௌதம். பாடல்களை வரும் நவம்பர் மாதமும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், இசை வெளியீட்டிற்கு முன்புதான் ‘டைட்டில்’ என்ன என்பதை வெளியிடுவோம் என்றும் அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், அஜித் கேரக்டரை வைத்து இப்படத்தின் ‘டைட்டில்’ இருக்காதாம். ஆக... ‘சத்யா’, ‘சத்யதேவ்’ போன்ற தலைப்புகள் இருக்க வாய்ப்பில்லை என்பது அவர் கூறியிருப்பதன் மூலம் தெரிய வருகிறது.

லேட்டஸ்டாக வந்த தகவலின்படி ‘தல 55’ படத்தின் சாட்டிலைட் உரிமையை 19 கோடி ரூபாய்க்கு சன் டிவி வாங்கியிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;