சிம்ஹாவை இயக்கும் ‘மரியான்’ இயக்குனர்!

சிம்ஹாவை இயக்கும் ‘மரியான்’ இயக்குனர்!

செய்திகள் 10-Sep-2014 9:46 AM IST Chandru கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’ தந்த வெற்றியில் ‘ஜில்’லென்று இருக்கிறார் ‘அ.குமார்’ சிம்ஹா! எந்த கேரக்டர் கொடுத்தாலும்,அந்த கேரக்டராக மாறிவிடும் தன்மை படைத்த சிம்ஹா, அடுத்ததாக ‘மரியான்’ இயக்குனர் பரத் பாலாவின் படத்தில் நடிக்க இருக்கிறார். ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ படங்களைப் பார்த்த இயக்குனர் பரத் பாலா, தன் படத்தில் நடிக்க விருப்பமா என சிம்ஹாவிடம் ‘ஜிகர்தண்டா’ ரிலீஸிற்கு முன்பே கேட்டாராம். இந்திய அளவில் புகழ் பெற்ற ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தால் யாராவது தட்டிக் கழிப்பார்களா? உடனே சம்மதம் என தெரிவித்துவிட்டாராம் சிம்ஹா. இப்போது ‘ஜிகர்தண்டா’ படமும் வெளிவந்து சிம்புஹாவின் புகழ் மேலும் உயர்ந்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறதாம் இந்த டீம். பரத் பாலா தற்போது ‘டார்க் த்ரில்லர்’ கதை ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்தக் கதையில்தான் சிம்ஹா நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில் அவரும் சிம்ஹாவும் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் பரத் பாலா.

தற்போது ‘உறுமீன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்ஹா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;