விஜய்யை இயக்குகிறார் ‘ராஜா ராணி’ அட்லி!

விஜய்யை இயக்குகிறார் ‘ராஜா ராணி’ அட்லி!

செய்திகள் 11-Sep-2014 10:51 AM IST Chandru கருத்துக்கள்

தற்போது ‘கத்தி’ படத்தின் வேலைகளில் செம பிஸியாக இருக்கிறார் விஜய். இப்படத்தைத் தொடர்ந்து அவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 59வது படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கவிருக்கிறார் என லேட்டஸ்டாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்து விசாரித்த போது,

‘‘கடந்த ஆறேழு மாதங்களாகவே இந்த செய்தி வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அட்லி விஜய்யிடம் கதை சொல்லியிருப்பது உண்மைதான். விஜய்க்கும் அந்த கதை பிடித்திருக்கிறது. ஆனால், தற்போது ‘கத்தி’ படத்திலும், சிம்புதேவன் படத்திலும் விஜய் பிஸியாக இருப்பதால், அட்லி படம் வெறும் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருக்கிறது. ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீமான் இயக்கத்தில் ‘பகலவன்’ படத்தில் நடிப்பதற்காக விஜய்யிடம் கலைப்புலி தாணு கால்ஷீட் வாங்கியிருந்தார். அனேகமாக அந்த கால்ஷீட்டை அட்லி படத்திற்கு தாணு பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.’’ என தயாரிப்பாளர் தாணுவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தன.

முதல்முறை விஜய் - அட்லி கூட்டணி பேச்சு அடிபட்டபோது அப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷின் பெயர் அடிபட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அனேகமாக விஜய் படத்திற்கு மீண்டும் அனிருத்தே இசையமைக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வீடியோ


;