‘கோலி சோடா’வுக்கு பெருமை தேடித்தந்த விக்ரம்!

‘கோலி சோடா’வுக்கு பெருமை தேடித்தந்த விக்ரம்!

செய்திகள் 9-Sep-2014 11:04 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடம் வெளியான படங்களிலேயே சின்ன பட்ஜெட்டில் பெரிதாக ஜெயித்த படம் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ‘கோலி சோடா’தான். பெரிய ஹீரோக்கள் யாருமில்லாமல் சின்னப் பசங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சூப்பர் வெற்றியை இப்படத்தின் மூலம் சுவைத்தார் இயக்குனர் விஜய் மில்டன். இவர் தற்போது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் விக்ரம், சமந்தா நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள...’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ‘கோலி சோடா’ படம் தென்கொரியாவில் நடைபெறும் ‘பூசன் ஃபிலிம் ஃபெஸ்டிவலி’ல் திரையிடுவதற்கு தேர்வாகியிருக்கிறது. ‘வின்டோ ஆஃப் ஏசியன் சினிமா’ என்ற கேட்டகிரியில் இப்படம் தேர்வாவதற்கு முக்கிய காரணம் நடிகர் விக்ரம்தானாம். அவர்தான் இயக்குனர் விஜய் மில்டனிடம் ‘கோலி சோடா’ படத்தை இந்த திரைப்படவிழாவிற்கு அனுப்பக் கூறினாராம். வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் இப்படத்தின் திரையிடலில் விக்ரமும் கலந்து கொள்ள இருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;