மீண்டும் களமிறங்கும் ‘காதல் கேட்டை’ இயக்குனர்!

மீண்டும் களமிறங்கும் ‘காதல் கேட்டை’ இயக்குனர்!

செய்திகள் 9-Sep-2014 10:14 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் ‘காதல் கோட்டை’. 1996ஆம் ஆண்டு வெளிவந்து தேசிய விருதைப் பெற்ற இப்படத்தை இயக்கியவர் அகத்தியன். அதன்பிறகு அவர் ஒரு சில படங்களை இயக்கியிருந்தாலும், அவை எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. கடைசியாக விக்ராந்தை வைத்து ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற படத்தை 2008ஆம் ஆண்டு இயக்கினார். தற்போது, பயணத்தை மையமாகக் கொண்ட காதல் கதை ஒன்றை படமாக்கவிருக்கிறார் இயக்குனர் அகத்தியன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தன் மகள் விஜயலட்சுமியை கதாநாயகியாக களமிறக்கவிருக்கிறார் அவர். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் பாரதிராஜா தயாரிக்கிறார். இப்படம் காமெடி, ரொமான்ஸ், ட்விஸ்ட் என எல்லாவிதத்திலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் ஒரு படமாக இருக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'ஆதியும் அந்தமும்' அனைத்துப் பாடல்களையும் கேட்க


;