இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோ பிராப்ளம்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நோ பிராப்ளம்!

செய்திகள் 9-Sep-2014 10:08 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில்தான் நடிகர் கார்த்தி ஃபுட் பாய்ஸன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நேற்று இயக்குனர் முருகதாஸும் இதேபோன்றதொரு பிரச்சனை காரணமாக சென்னை மலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‘இது ஒரு சாதாரண பிரச்சனைதான்... பயப்படும்படி ஒன்றுமில்லை’ என்று கூறிவிட்டதால் சிகிச்சை முடிந்து நேற்று மாலையே தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், சில விஷமிகள் முருகதாஸ் நெஞ்சுவலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் வதந்திகளைப் பரப்பினர். இதுபோன்று வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 18ஆம் தேதியும், படம் தீபாவளிக்கும் வெளியாகவிருப்பதால், மீண்டும் தனது வேலைகளில் பிஸியாகத் தொடங்கிவிட்டது ‘கத்தி’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;