அப்பா புரமோஷன் வாங்கிய பிருத்விராஜ்!

அப்பா புரமோஷன் வாங்கிய பிருத்விராஜ்!

செய்திகள் 9-Sep-2014 10:00 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ், மலையாளத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகர் பிருத்விராஜ் நீண்டநாட்களாக தான் நேசித்துவந்த சுப்ரியா என்ற பத்திரிகையாளரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக பிருத்விராஜ், சினிமா நிகழ்ச்சிகளையும், படப்பிடிப்புகளையும் தவிர்த்துவந்தார். இதற்குக் காரணம், தன் மனைவி சுப்ரியாவிற்கு எந்த நேரம் பிரசவம் ஆகலாம் என்பதால், அவரை கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தததால்தானாம். இந்நிலையில் நேற்று மாலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் சுப்ரியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் மிக்க நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த சந்தோஷமான தருணத்தில் நடிகர் பிருத்விராஜ் ‘எண்ணு நின்டே மொய்தீன்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் அவரின் மனைவி அருகே இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதாம்.

பிருத்விராஜ், சித்தார்த் நடிப்பில் உருவாகிவரும் ‘காவியத்தலைவன்’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் வாலி பாடல் மேக்கிங் வீடியோ


;