தியேட்டர் ஆபரேட்டராக மாறிய சித்தார்த்!

தியேட்டர் ஆபரேட்டராக மாறிய சித்தார்த்!

செய்திகள் 8-Sep-2014 2:58 PM IST VRC கருத்துக்கள்

‘’கன்னட ‘லூசியா’ படத்தை கிட்டத்தட்ட 10 தடவை பார்த்திருப்பேன். மனதை ரொம்பவும் பாதித்த படம் இது. இதனை நாமே தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்து ‘லூசியா’ படத்தின் இயக்குனர் பவன் குமாருக்கு ஃபோன் பண்ணினால் ‘லூசியா’வின் தமிழ் ரைட்ஸை சி.வி.குமார் வாங்கி விட்டார் என்றார்! கேம்ல முதல்ல பசர் அழுத்துற மாதிரி எல்லா இடத்துலயும் சி.வி.குமார் முதல்ல பசர் அழுத்தி விடுகிறார். இதனால் ‘லூசியா’வை தமிழ்ல தயாரிக்க முடியலையே என்ற வருத்தத்தில் இருந்த எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினான் குமார்! அவனுக்கு நன்றி! யாரும் தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு வயசுல சின்னவன் குமார் என்பதால் நான் அவனை உரிமையோடு வாடா, போடா அப்படின்னு அழைப்பேன். ‘லூசியா’ படத்தை பவன் குமார் கிட்டத்தட்ட ஆயிரம் பேர்கிட்டயிருந்து பணத்தை திரட்டி தயாரித்திருக்கிறார்! கன்னடத்தில் ஆயிரம் பேர் இணைந்து தயாரித்த படத்தை தமிழில் சி.வி.குமாருடன் ‘அபி டி.சி.எஸ்’ அபினேஷ் இளங்கோவன், ‘ஓய்நாட்’ சசி, ‘ரேடியன்ஸ் மீடியா’ வருண் மணியன் ஆகியோர் கைகோர்த்து தயாரித்துள்ளனர். நல்ல ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு அனைவருக்கும்’’ நன்றி என்றார் சித்தார்த்.

இப்படி சித்தார்த் பேசியது, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்! இப்படத்தில் சித்தார்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு வேடம் தியேட்டர் ஆபரேட்டர்! கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘லூசியா’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியிருக்கும் ‘எனக்குள் ஒருவன்’ படத்தை ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக கன்னட நடிகை தீபா சன்னிதி நடித்திருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். படத்தின் ஆடியோவை விஜய்சேதுபதி வெளியிட, நடிகைகள் சமந்தா, சஞ்சிதா ஷெட்டி, முதலானோர் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் நடிகை குஷ்பு, இயக்குனர்கள் சீனுராமசாமி, வசந்த பாலன், ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ‘எனக்குள் ஒருவன்’ படக்குழுவினரை வாழ்த்திப் பேசினர். இந்தப் படத்தை ‘டிரீம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;