'மொசக்குட்டி' படத்திற்கு 'U' சான்றிதழ்!

'மொசக்குட்டி' படத்திற்கு  'U' சான்றிதழ்!

செய்திகள் 8-Sep-2014 2:55 PM IST Chandru கருத்துக்கள்

'மைனா', 'சாட்டை' போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் 'மொசக்குட்டி'. இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகியாக மகிமா நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஜீவன். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் ரமேஷ் விநாயகம். சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இரண்டு ‘கட்’களுடன் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். படம் வருகிற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;