விஜய்க்காக காத்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

விஜய்க்காக காத்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்!

செய்திகள் 8-Sep-2014 12:10 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘அமர காவியம்’ படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் ஜிப்ரானின் இசையமைப்பில் உருவான பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சந்தோஷத்தை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்த ஜிப்ரான், தனது ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் விஜய் ரசிகர் ஒருவர், ‘எப்போது எங்கள் தளபதி படத்திற்கு இசையமைப்பீர்கள்?’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் போனில் பேசுவது போல் இருக்கும் படத்தை போஸ்ட் செய்து ‘ஐயாம் வெயிட்டிங்...’ என்று கூறியிருக்கிறார்.

ஆக... விரைவில் விஜய் படத்திற்கு இசையமைப்பதற்கான அழைப்பு ஜிப்ரான் வீட்டுக் கதவைத் தட்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;