செப்டம்பர் 18ல் ‘கத்தி’ இசை! - சௌந்தர்யா ரஜினி

செப்டம்பர் 18ல் ‘கத்தி’ இசை! - சௌந்தர்யா ரஜினி

செய்திகள் 8-Sep-2014 11:53 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறது ‘ஈராஸ் மியூசிக்’ நிறுவனம். ‘ஈராஸ்’ நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட சௌந்தர்யா ரஜினியின் முயற்சியால் இந்த வியாபாரம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. ‘ஈராஸ் மியூசிக்’ நிறுவனம் வாங்கியிருக்கும் முதல் தமிழ்ப் படமான ‘கத்தி’யின் இசை வெளியீட்டை ஏற்கெனவே திட்டமிட்ட அதே செப்டம்பர் 18ல் நடத்த இருப்பதாக சௌந்தர்யா ‘ட்வீட்’ செய்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்திருப்பவர் அனிருத். மொத்தம் 6 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில் ‘செல்ஃபி புள்ள...’ என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;