போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!

போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!

செய்திகள் 8-Sep-2014 10:58 AM IST Chandru கருத்துக்கள்

‘நண்பேன்டா’ படத்தைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்தில் நடிக்கவிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ‘கெத்து’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘மான் கராத்தே’ இயக்குனர் திருக்குமரன் இயக்கவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று நேற்று இணையதளம் முழுவதும் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டது. உதயநிதி ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதுபோல் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தின் போஸ்டர் ‘தி போர்ன் லீகஸி’ ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என சர்ச்சை ஒன்று எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ‘ட்வீட்’ ஒன்று செய்திருக்கிறார். அதில்,

‘‘நான் அடுத்ததாக ‘கெத்து’ என்ற படத்தில் நடிக்கிறேன். இப்படத்தை திருக்குமரன் இயக்குகிறார். ஆனால், ‘கெத்து’ படத்தின் போஸ்டர் என வெளிவந்திருப்பது ரசிகர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது அதிகாரபூர்வமானதல்ல!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரசிக சிகாமணிகளே... ‘நீங்களே பாம் வச்சு... அதை ஏன் நீங்களே கண்டுபிடிக்கிறீங்க’!


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;