‘கெத்து’ காட்டும் உதயநிதி ஸ்டாலின்!

‘கெத்து’ காட்டும் உதயநிதி ஸ்டாலின்!

செய்திகள் 8-Sep-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

நயன்தாராவுடன் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘நண்பேன்டா’ படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறது. ஜெகதீஷ் இயக்கிவரும் இப்படத்தில் உதயநிதியுடன் வழக்கம்போல் சந்தானமும் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. இப்படத்தைத் தொடர்ந்து ‘என்றென்றும் புன்னகை’ இயக்குனர் ஏ.ஹெச்.அஹமது இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார் உதய். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, காமெடிக்கு தம்பி ராமையா, இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு மதி என புதிய டீமுடன் களமிறங்குகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது சொந்த பேனரான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிக்கும் ‘கெத்து’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார் உதயநிதி. சிவகார்த்திகேயனை வைத்து ‘மான் கராத்தே’ படம் கொடுத்த இயக்குனர் திருக்குமரன்தான் இந்த ‘கெத்து’ படத்தையும் இயக்கவிருக்கிறார். ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கதாநாயகிக்கான தேடுதல் வேட்டையில் எமி ஜாக்ஸனின் பெயர் அடிபடுவதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;