அனுஷ்காவின் 19 மாத கடின உழைப்பு!

அனுஷ்காவின் 19 மாத கடின உழைப்பு!

செய்திகள் 8-Sep-2014 10:29 AM IST Chandru கருத்துக்கள்

அனுஷ்கா தற்போது தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்திலும், அஜித்துடன் கௌதம் மேனன் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கிலும் ‘ருத்ரமாதேவி’, ‘பாஹுபலி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘அருந்ததி’ படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ‘ருத்ரமாதேவி’யின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த வருடம் பிப்ரவரியில் தொடங்கியது. இப்படத்தில் காகத்தியா நாட்டின் ராணி ருத்ரம்மா தேவியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறது ‘ருத்ரமாதேவி’ டீம். கடந்த 19 மாதங்களாக இப்படத்திற்காக வாள் பயிற்சி, குதிரையேற்றம் என பலவற்றையும் கற்றுக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார் அனுஷ்கா. இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையோடு உருவாகி வரும் ‘ருத்ரம்மாதேவி’யை இயக்கி வருபவர் குணசேகர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;