சுயம்புலிங்கமாக கமல்!

சுயம்புலிங்கமாக கமல்!

செய்திகள் 8-Sep-2014 9:52 AM IST VRC கருத்துக்கள்

கமல் நடித்து வரும் ‘திருசியம்’ ரீ-மேக்கான ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் உள்ள தொடுபுழாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘பாபநாச’த்தின் ஒரு சில காட்சிகள் ‘திருசியம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்த தொடுபுழா உட்பட பல லொகேஷன்களில் படமாகி வருகிறது. ‘திருசியம்’ படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கேரக்டர் பெயர் ஜார்ஜ் குட்டி! ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்து வரும் கேரக்டர் பெயர் சுயம்புலிங்கம் என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் மீனா நடித்த கேரக்டரில் தமிழில் கௌதமி நடிக்கிறார். மலையாள சினிமாவில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீனா ரீ-என்ட்ரியாகி நடித்த படம் ‘திருசியம்’. அதைப்போல கௌதமி தமிழில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகி நடிக்கும் படம் ‘பாபநாசம்’. ‘பாபநாசம்’ படத்தை ‘திருசியம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசஃபே இயக்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;