‘ராஜா ராணி’ இயக்குனருக்கு நவம்பரில் திருமணம்!

‘ராஜா ராணி’ இயக்குனருக்கு நவம்பரில் திருமணம்!

செய்திகள் 8-Sep-2014 9:30 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, ‘ராஜா ராணி’ மூலம் மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் அட்லி. இந்த 28 வயது இளைஞர் தனக்கான ‘ராணி’யைக் கண்டுபிடித்து, காதலித்து, தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவரை கரம் பிடிக்க உள்ளார். அந்த ராணி வேறு யாருமல்ல... பிரபல டிவி நடிகையும், ‘நான் மகான் அல்லா’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படங்களில் நடித்தவருமான நடிகை ப்ரியாதான். கடந்த 8 வருடங்களாக ப்ரியாவை, இயக்குனர் அட்லிக்கு தெரியுமாம். தங்களுக்குள் மலர்ந்த காதலை பெற்றோர்களிடம் சொல்லி, முறையான அனுமதியோடு வரும் நவம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார்கள். நேற்று சென்னையின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அட்லி - ப்ரியாவின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவ்விழாவில் ஆர்யா, நயன்தாரா உட்பட அட்லிக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;