‘மன்னன்’, ‘போக்கிரி’ வரிசையில் போக்கிரி மன்னன்!

‘மன்னன்’, ‘போக்கிரி’ வரிசையில் போக்கிரி மன்னன்!

செய்திகள் 6-Sep-2014 9:51 AM IST VRC கருத்துக்கள்

‘‘ரஜினி நடித்த ‘மன்னன்’ சூப்பர் ஹிட்டான படம். அதைப்போல விஜய் நடித்த ‘போக்கிரி’ படமும் சூப்பர் ஹிட்டானது. இந்த இரண்டு படங்களின் தலைப்பில் இப்போது உருவாகியுள்ள படம் ‘போக்கிரி மன்னன்’. ரஜினி, விஜய் நடித்த அந்தப் படங்களை போன்று இந்த ‘போக்கிரி மன்னன்’ படமும் சூப்பர் ஹிட்டாகும்’’ என்றார் பல ஹிட் படங்களை தயாரித்துள்ள ‘கலைப்புலி’ எஸ்.தாணு! இவர் இப்படி வாழ்த்திப் பேசியது நேற்று சென்னை, கமலா தியேட்டரில் நடந்த ‘போக்கிரி மன்னன்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்! நடன கலைஞராக இருந்து, டான்ஸ் மாஸ்டராக உயர்ந்து, அதன் பிறகு கதாநாயக நடிகராக, வெற்றிப் பட இயக்குனராக இருந்து வரும் பிரபுதேவா வரிசையில் ‘போக்கிரி மன்னன்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். இப்படத்தை ஸ்ரீநிதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்திருக்க, அறிமுக இயக்குனர் ராகவ் மாதேஷ் இயக்கியிருக்கிறார். இந்திரவர்மன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோவை ‘கலைப்புலி’ எஸ்.தாணு வெளியிட, நடிகர்கள் சாந்தனு, கருணாஸ், இயக்குனர் ராஜ்கபூர் முதலானோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;