‘ஜிகர்தண்டா’ கூட்டணியின் அடுத்த இசை ஆல்பம்!

‘ஜிகர்தண்டா’ கூட்டணியின் அடுத்த இசை ஆல்பம்!

செய்திகள் 5-Sep-2014 10:32 AM IST Chandru கருத்துக்கள்

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’ என இவர் இசையமைத்த பெரும்பாலான படங்கள் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கின்றன. அதிலும் கடைசியாக இவர் இசையமைப்பில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’ படத்தின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்புக் கிடைத்தது. இப்போது சித்தார்த்தின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

கன்னடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லூசியா’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் சித்தார்த்தை நாயகனாக வைத்து தயாரித்து வருகிறது. தீபா சன்னிதி, ஸ்ருதி டாங்கே, ‘ஆடுகள்’ நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிரசாத் ராமன் இயக்க, ஒளிப்பதிவு செய்கிறார் கோபி அமர்நாத். சந்தோஷ் நாராயணின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. ‘ஜிகர்தண்டா’வுக்கு கிடைத்த அதே வரவேற்பு இப்படத்தின் இசைக்கும் கிடைக்கும் என காத்திருக்கிறது ‘எனக்குள் ஒருவன்’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;