‘விஐபி’ ரகுவரன் 50 நாட் அவுட்!

‘விஐபி’ ரகுவரன் 50 நாட் அவுட்!

செய்திகள் 5-Sep-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் கேரியரிலேயே மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது ‘விஐபி’. அதிலும் அவரின் 25வது படம் என்ற அடைமொழியோடு வந்திருக்கும் படத்திற்கு இப்படிப்பட்ட வெற்றி கிடைத்திருப்பதால் சூப்பர் சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். போட்ட பணத்தைவிட இரண்டு பங்கு லாபம் கிடைத்திருப்பதாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தயாரித்தவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள், வெளியிட்டவர்கள் என அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்த 2014ஆம் ஆண்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி என தாராளமாக ‘வேலையில்லா பட்டதாரி’யைச் சொல்லலாம். இன்று 50வது நாளை எட்டியிருக்கிறது ‘விஜபி’.

இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அனைவராலும் கூறப்படுபவர் தனுஷ். ஒவ்வொரு காட்சியிலும் அவர் பேசிய வசனமும், பாடி லாங்குவேஜும் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது. அதற்கடுத்தபடியாக அனிருத்தின் மிரட்டல் இசை. பின்னணி இசையிலும், பாடல்களிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் மனிதர். குறிப்பாக இப்படத்தின் பாடல்கள், படம் ரிலீஸான பிறகே பெரிய ஹிட் அடித்தன. தனுஷ், அனிருத் ஆகியோரின் திறமைகளை சரியாகப் பயன்படுத்திய இயக்குனர் வேல்ராஜின் திரைக்கதையும், இயக்கமும் இன்னொரு காரணம்.

‘பேட் பாய்’ ரகுவரன் 50தோடு நிற்கமாட்டார்... இன்னும் அதிக ரன்களைக் குவிப்பார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டீசர்


;