ஒரே நேரத்தில் வெளியாகும் மோனல் கஜாரின் இரண்டு படங்கள்!

ஒரே நேரத்தில் வெளியாகும் மோனல் கஜாரின் இரண்டு படங்கள்!

செய்திகள் 4-Sep-2014 2:51 PM IST Chandru கருத்துக்கள்

நடிகை மோனல் கஜார் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில்தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘சிகரம் தொடு’ படத்தில் ‘கமிட்’டானார். தற்போது இந்த இரண்டு படங்களுமே வரும் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவிருப்பதால் செம குஷியில் இருக்கிறார் அம்மணி!

‘யாமிருக்க பயமே’ படத்தைத் தொடர்ந்து கிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘வானவராயன் வல்லவராயன்’. இப்படத்தில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ‘மாகாபா’ ஆனந்தும் நடித்திருக்கிறார். ராஜமோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

‘யுடிவி’ மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் ‘சிகரம் தொடு’. இப்படத்தில் கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்க, விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜும், நண்பனாக சதீஷும் நடித்திருக்கிறார்கள். ஏடிஎம் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘சிகரம் தொடு’ படம் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;