விஜய் ஆண்டனியின் அடுத்த 3 படங்கள்!

விஜய் ஆண்டனியின் அடுத்த 3 படங்கள்!

செய்திகள் 4-Sep-2014 2:44 PM IST Chandru கருத்துக்கள்

‘சலீம்’ தந்த வெற்றியில் உற்சாகமாக இருக்கிறார் இசையமைப்பாளர்... ஸாரி... ஸாரி... ஹீரோ விஜய் ஆண்டனி. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதில் ஒன்று... விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் புதுமுகம் என்.ஆனந் என்பவர் இயக்கும் ‘இந்தியா பாகிஸ்தான்’. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டதாம். இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸிற்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் ‘சைத்தான்’. இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னரே ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகளில் இறங்க உள்ளாராம் விஜய் ஆண்டனி.

இன்று நடந்த ‘சலீம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய் ஆண்டனி, ‘‘நல்ல படமாக இருந்தால் மட்டுமே நான் வெளியிடுவேன். முழுவதும் எடுத்து முடித்து பின்னர்கூட அந்தப் படம் நல்ல படமாக இல்லையென்றால், எத்தனை கோடி செலவழித்திருந்தாலும் அதை எரித்துவிடுவேன்!’’ என உணர்ச்சி பொங்க கூறினாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;