‘இதயம் முரளி’யாக மாறும் உதயநிதி ஸ்டாலின்!

‘இதயம் முரளி’யாக மாறும் உதயநிதி ஸ்டாலின்!

செய்திகள் 4-Sep-2014 12:44 PM IST Chandru கருத்துக்கள்

முரளி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர் நடிப்பில் வெளிவந்த ‘இதயம்’ படத்தைத்தான். மனிதர் கடைசி வரை ஹீராவிடம் காதலைச் சொல்லாமலேயே ரசிகர்களிடம் ‘அப்ளாஸை’ அள்ளினார். இந்தப் படத்திற்குப் பிறகு முரளி என்று கூப்பிட்ட அனைவருமே அவரை ‘இதயம் முரளி’ என்றுதான் அழைத்தார்கள். அந்த அளவுக்கு இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்போது இந்த ‘இதயம் முரளி’ என்பதையே தன் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அறிமுக இயக்குனர் ஜெகதீஷின் இயக்கத்தில் நயன்தாரா, சந்தானம் ஆகியோருடன் ‘நண்பேன்டா’ படத்தில் தற்போது பிஸியாக இருக்கிறார் உதயநிதி. இப்படம் முடிவடைந்ததும், ‘என்றென்றும் காதல்’ ஏ.ஹெச்.அஹமது இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்குதான் ‘இதயம் முரளி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ‘ஓகே ஓகே’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் தனது பழைய கூட்டணியை விட்டு வெளியே வருகிறார் உதயநிதி. அதாவது காமெடிக்கு சந்தானத்திற்குப் பதில் தம்பி ராமையா, மியூசிக்கிற்கு ஹாரிஸுக்குப் பதில் அனிருத், ஒளிப்பதிவுக்கு பாலசுப்பிரமணியெம்மிற்குப் பதில் மதி என வேறொரு டீமை உருவாக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;