‘தல’யின் ரசிகராகிய இன்னொரு பிரபல ஹிந்தி நடிகர்!

‘தல’யின் ரசிகராகிய இன்னொரு பிரபல ஹிந்தி நடிகர்!

செய்திகள் 4-Sep-2014 12:06 PM IST Chandru கருத்துக்கள்

சாதாரண மக்கள் மட்டுமின்றி நடிகர் அஜித்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் லேட்டஸ்டாக பாலிவுட்டின் பிரபல ஹீரோ ஒருவரும் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல.... நடிகர் ஜான் ஆபிரஹாம்தான்.

மணிரத்னத்தால் ‘அஞ்சலி’ படத்தில் டீன் ஏஜ் பெண்ணாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவரும், பிரபல ஃபேஷன் டிஸைனருமான காயத்ரி சாய் என்பவரிடம்தான் இது குறித்து நடிகர் ஜான் ஆபிரஹாம் தெரிவித்திருக்கிறார். இதைப் பற்றி தனது ட்வீட்டில், ‘‘நான் அஜித்தின் ரசிகன். நேரம் வரும்போது நிச்சயம் அவரை சந்திப்பேன் என ஜான் ஆபிரஹாம் என்னிடம் தெரிவித்தார்!’’ என்று காயத்ரி சாய் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே ‘பாலிவுட் பாஷா’ ஷாருக்கானுக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து ‘அசோகா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். ஷாருக்கான் எப்போது சென்னை வந்தாலும் ரஜினியைப் போலவே, அஜித்தைப் பற்றியும் குறிப்பட மறக்கமாட்டார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;