முஸ்லீம்களிடம் நல்ல பெயர் வாங்கிய ‘சலீம்’ படம்!

முஸ்லீம்களிடம் நல்ல பெயர் வாங்கிய ‘சலீம்’ படம்!

செய்திகள் 4-Sep-2014 11:48 AM IST Chandru கருத்துக்கள்

‘நான்’ படத்தைத் தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் ‘சலீம்’ படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக முஸ்லீம்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் போனில் பேசிய மலேசிய முஸ்லீம் ரசிகர் ஒருவர், ‘‘தங்கள் ஜமாத்திலுள்ள முஸ்லீம்களிடம்... ‘சலீம்’ படம் நம் சமுதாய மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் சென்று பாருங்கள்’’ என்று கூறியதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லீம் சமுதாய மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி சமீபகாலமாக சில படங்கள் சர்ச்சையில் சிக்கி வந்த சூழ்நிலையில், ‘சலீம்’ படம் முஸ்லீம் சமுதாய மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பது சினிமாவில் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இப்படத்தில் வந்த ‘‘சலீம்னு பேரைச் சொன்னவுடனே தீவிரவாதின்னு முடிவு பண்ணாதீங்க. வேணும்னா என் பேரை விஜய்னு வச்சுக்குங்க... இல்ல ஆண்டனின்னு வச்சுக்குங்க’’ என்ற வசனத்திற்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

‘சலீம்’ படம் மொத்தம் 248 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, முதல் 5 நாட்களிலேயே தாங்கள் போட்ட ‘முதல்’ கிடைத்துவிட்டதாகக் கூறி விநியோகஸ்தர்கள் பலரும் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம். அதோடு தற்போது கூடுதலாக 30 தியேட்டர்களும் இப்படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். திருட்டு விசிடி பிரச்சனைகளையும் மீறி ‘சலீம்’ படத்திற்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பை, நல்ல படங்களை ரசிகர்கள் தியேட்டரில் சென்று கண்டுகளிக்க தயாராக இருப்பதற்கு உதாரணமாகவும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எக்ஸ் வீடியோஸ் தமிழ் - டீசர்


;