மாட்டிக்கொண்ட ‘ஐ’ டீஸர் திருட்டு ஆசாமி!

மாட்டிக்கொண்ட ‘ஐ’ டீஸர் திருட்டு ஆசாமி!

செய்திகள் 4-Sep-2014 10:57 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த மூன்று நாட்களாக ‘ஐ’ டீஸர் திருட்டுத்தனமாக வெளியானதுதான் கோலிவுட்டின் ‘ஹாட் டாக்’காக இருந்து வந்தது. இந்நிலையில், அந்த டீஸரை யார், எப்படி வெளியிட்டார்கள் என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘‘டீஸரை யார் வெளியிட்டது என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இந்த குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் வாசன் என்ற அந்த நபர், டீஸரை வெளியிட்டது மட்டுமல்லாமல், தன்னுடைய முழு புரொபலையும் கொடுத்து, ‘நான்தான் டீஸரை வெளியிட்டேன். உங்களால் என்ன செய்ய முடியும்’ எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய கைக்கு ‘ஐ’ டீஸர் எப்படி கிடைத்தது என்பதை எங்கள் பக்கம் விசாரித்தபோது, இரவு நேரத்தில் எங்கள் ஆபிஸ் கதவை உடைத்து உள்ளே புகுந்து ‘ஐ’ டீஸரை திருடி இருப்பதாக தெரிய வந்துள்ளது’’ என்றார்.

‘ஐ’ டீஸரை மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறீர்களா? என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், ‘‘எதற்காக மாற்ற வேண்டும். இது ஒரு மெகா பட்ஜெட் படம். யாரோ ஒருவர் திருட்டுத்தனமாகவும், தெளிவில்லாமலும் வெளியிட்ட டீஸர்தானே இது. நாங்கள் திட்டமிட்டபடி இதே டீஸரை நல்ல குவாலிட்டியுடன் வெளியிட உள்ளோம்!’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Padmaavath - டிரைலர்


;