‘சலீம்’ படத்தைத் தொடர்ந்து ‘மகாபலிபுரம்’!

‘சலீம்’ படத்தைத் தொடர்ந்து ‘மகாபலிபுரம்’!

செய்திகள் 4-Sep-2014 10:34 AM IST VRC கருத்துக்கள்

‘‘சென்னை மக்கள் மட்டுமல்லாமல் அடுத்த மாவட்ட மக்கள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் என்றில்லாமல், அயல் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பலர் கூடும் சுற்றுலாதளம் மகாபலிபுரம். இந்த மகாபலிபுரத்தின் பின்னணியில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக சித்தரிக்கப்பட்டுள்ள படம்தான் ‘மகாபலிபுரம்’. அனைவருக்குமான ஒரு மெசேஜை சொல்லும் இப்படத்தை குறிப்பாக இளம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்’’ என்கிறார் ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் டான் சான்டி. இயக்குனர் பிரபு சாலமனின் நெருங்கிய நண்பர் இவர்!

‘கிளாப் போர்ட்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் விநாயக் தயாரித்து, அவரே முக்கிய ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவருடன் மற்ற ஹீரோக்களாக வெற்றி, கருணா நடிக்க, கதையின் நாயகிகளாக வித்திகா, அங்கனா நடித்திருக்கிறார்கள். ‘முகமூடி’ புகழ் கே இசை அமைத்திருக்கிறார். சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்தினை ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ ஆர்.கே.சுரேஷ் வாங்கி வெளியிடுகிறார். நேற்று (3&-9&-14) சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் ஆடியோவை வெளியிட, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு பேசிய ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ அதிபர் ஆர்.கே.சுரேஷ்,

‘‘சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சலீம்’ படத்தை தயாரித்து, வெளியிட்டோம். இப்படத்தைத் தொடர்ந்து ‘மகாபலிபுரம்’ படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறோம். எங்கள் நிறுவனம் வரிசையாக நல்ல மெசேஜ் உள்ள படங்களைத்தான் தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறது. இதேபோன்று ‘மகாபலிபுரம்’ படத்திலும் நல்ல ஒரு மெசேஜ் இருக்கிறது. சென்னை பக்கத்தில் உள்ள இடம் ‘மகாபலிபுரம்’. இந்த இடம் நிறைய படங்களில் இடம் பெற்றிருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து மகாபலிபுரம் பின்னணியில் யாரும் ஒரு கதையை சொன்னதாக தெரியவில்லை. ஆனால் அதை வியாயக் உட்பட பல இளைஞர்கள் இணைந்து செய்திருக்கிறார்கள். அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் இது. இதை வாங்கி வெளியிடுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி! இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹாரர் மூவியாக உருவாகியுள்ள ‘ஆ’ படத்தையும் ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் வெளியிட இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;